News February 17, 2025
இந்து சமயபேரவை தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சிவ தொண்டர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபயணமாகவும் 12 சிவாலயங்களையும் வணங்கி வருவது வழக்கம். எனவே அந்த இரண்டு தினங்களும் 12 சிவாலயங்களுக்கு செல்லும் வழிகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமயப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்ி.
Similar News
News November 21, 2025
நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

News November 20, 2025
தோவாளை மலர் சந்தையில் மல்லி ரூ.1400 ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1400 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ ரூ.10000 மாக இருந்த நிலையில் இன்று மேலும் மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து பாதித்துள்ளது. இவனைத் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.