News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News October 17, 2025
புதுவை: தீபாவளி பரிசுக்கு செலவு செய்ய தடை!

முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் உள்பட 33 எம்எல்ஏ-க்களுக்கும் அமைச்சரவை செலவில் ‘ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கி வந்தார் தீபாவளி பரிசு பொருட்களுக்கு செலவு செய்ய மத்திய நிதி அமைச்சகம் நேற்று தடை விதித்துள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியில் பல எம்எல்ஏ-க்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News October 17, 2025
புதுவை: காலி மனையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலி மனை விபரங்களை பெற்று, சொத்து வரி செலுத்த வேண்டி கேட்பு அறிக்கை, மனையின் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.15 நாட்களுக்குள் பணம் செலுத்தி ரசிதை பெற்றுக்கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில்
அசையும் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
புதுவை: இந்த ஆண்டின் சராசரி மழை அளவு

காரைக்கால் பகுதியில் பெய்த மழையின் அளவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய மாதம் வரை பெய்த மழையின் அளவு : 772.7 மி.மீ; இந்த மாதத்தில் 15.10.2025 வரை பெய்த மழையின் அளவு: 86 மி.மீ; 16.10.2025 அன்று மழை பொழிவு: 5.9 மி.மீ; 16.10.2025 வரை பெய்த மொத்த மழையின் அளவு 864.6 மி.மீ; இந்த ஆண்டு சராசரியாக பெய்த மழையின் அளவு 1388.5 மி.மீ என வானிலை மையம் மூலம் காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.