News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

Similar News

News November 20, 2025

சென்னையில் ‘டீ’ குடிக்கச் சென்ற பெண்ணுக்கு கொடூரம்!

image

சென்னை மாதவரத்தில் 31 வயது டெலிவரி செய்யும் பெண் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் தோளைத் தொட்டு, மோசஸ் (எ) அப்பு (25) என்பவர் ஆபாசச் சைகை செய்ததோடு அவரை திட்டி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மோசஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ள அவர் BNS சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 20, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

இரவு நேர ரயில் சேவை; மீண்டும் தொடங்க கோரிக்கை

image

சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு ரயில் பாதைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இரவு நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரத்து நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!