News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>இணையதளத்தில் <<>>வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

Similar News

News October 15, 2025

செங்கல்பட்டு: மூளை சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

image

மறைமலை நகர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (36), இவர் கடந்த 12 ந்தேதி தொழிற்சாலை பணியின் போது கூரை மேல் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பூபாலன் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

News October 15, 2025

செங்கல்பட்டு: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

கிளாம்பாக்கத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அக்.16 முதல் வரும் 19-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2,092 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இ.சி.ஆர் சாலை அல்லது ஓ.எம்.ஆர்., சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!