News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News November 16, 2025
45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்,இன்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 67 புகார்கள் பெறப்பட்டு, 45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
ரெட்டியார் பாளையம் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் இன்று (நவ.15) பொதுமக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் எஸ்பி ரகுநாயகம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகாராக தெரிவித்தனர். அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
News November 15, 2025
காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

(நவ.15) காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காரைக்கால் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்தில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிரவி திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


