News March 15, 2025
இந்தியாவின் பழமையான பள்ளிவாசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள பழைய ஜும்மா பள்ளிவாசல் இந்தியாவின் மிகவும் பழமையான பள்ளிவாசலாக கருதப்படுகிறது. கி.பி 628ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் 1000 ஆண்டிற்கும் மேலாக இஸ்லாமிய கலாச்சாரத்தை பறைசாற்றி இருக்கிறது. திராவிட இஸ்லாமிய மற்றும் தமிழ் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்த பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசல் 11ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
Similar News
News March 17, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 17, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

ராமநாதபுரத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
News March 17, 2025
கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் கடந்தாண்டு நவ.1 அன்று பட்டப்பகலில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.