News March 5, 2025
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.<
Similar News
News April 21, 2025
பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: பெண் பலி

ஆந்திராவைச் சேர்ந்த போலீஸ்காரரான சைதன்யாவின் மனைவி பிரியங்கா (31), நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) ஆரணி அடுத்த கொசவன்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, தனது 10 வயது மகன் உடன் பேருந்தில் சென்றார். பின், ஆரணியில் இருந்து அவரது தங்கை சசிரேகாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
News April 20, 2025
மீஞ்சூர்: வேலைக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் கூலி வேலை செய்வதற்காக வந்தபோது, நெஞ்சு வலி இருப்பதாக படுத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சக பணியாளர்கள் வேலை செய்ய எழுப்பிய போது சத்தம் இல்லாததால் அவரை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, ▶மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, ▶முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, ▶திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், – 7373002993, ▶பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் – 7373002996, ▶திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் – 9445000412, ▶பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் – 9445000410, ▶திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் – 9445000411, ▶மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912.