News September 13, 2024

இதுவரை 770 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரும்பு சாகுபடி என்பது உத்திரமேரூரில் தான் அதிகம் நடைபெறுகிறது. மாவட்ட அளவில், 2023-24ம் நிதியாண்டில் 2,160 ஏக்கர் வேளாண் துறை வாயிலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1,476 ஏக்கர் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதேபோல, நடப்பாண்டிலும், 2,160 ஏக்கர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால், இதுவரை 770 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி நடந்துள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.

Similar News

News August 9, 2025

காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.

News August 8, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.

error: Content is protected !!