News April 4, 2025

இதுவரை 55 பேருக்கு பாதிப்பு

image

திருவல்லிக்கேணி பகுதியில், பிரபலமான ‘ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு (மார்.30) முந்தைய நாள் இங்கு பீப், ஷவர்மா, பிரியாணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 55 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 9, 2025

சென்னையில் விருப்ப எண்கள் வாங்க அரிய வாய்ப்பு

image

பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கான விருப்ப செல்போன் எண்கள் (பேன்சி நம்பர்) ஜூலை 13 வரை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசி எண்ணாக பேன்சி எண்களை பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News July 9, 2025

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

image

முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை 4ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்.

News July 9, 2025

பெயிலானாலும் வேலை நிச்சயம்; TN அரசின் சூப்பர் திட்டம்

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை TN அரசு தொடங்கியுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு&ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும், தகவலுக்கு (044-22500107, 044-25268320 ). SHARE IT. <<17003380>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!