News April 4, 2025
இதுவரை 55 பேருக்கு பாதிப்பு

திருவல்லிக்கேணி பகுதியில், பிரபலமான ‘ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு (மார்.30) முந்தைய நாள் இங்கு பீப், ஷவர்மா, பிரியாணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 55 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 10, 2025
ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.
News December 10, 2025
சென்னை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News December 10, 2025
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பெண் ரவுடிக்கு சிறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


