News April 5, 2025

இடி, மின்னல், கடல் அரிப்பை மாநில பேரிடர்களாக அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி மின்னல் ஆகியவை புதுச்சேரி மாநிலத்தின் பேரிடர்களாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் சம்பவங்களில் மாநில பேரிடர் மீட்பு நிதி விதிமுறைகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.

Similar News

News April 13, 2025

சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

image

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

News April 13, 2025

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

image

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் புதுச்சேரியில் நீங்கள் செல்ல வேண்டிய 10 இடங்கள்: 1.பிரெஞ்சு தூதரகம், மரைன் ஸ்ட்ரீட், 2.லே ட்யூப்லெக்ஸ் லேன், 3.ராக் பீச், 4.பாரடைஸ் பீச், சுண்ணாம்பார் பேக்வாட்டர்ஸ், 5.ஆரோவில் மட்ரி கோயில் 6.பலைஸ் டி மாஹே, 7.ஸ்ரீ அரபிந்தோ ஆசிரம முற்றம், 8.சேம்பர் டி காமர்ஸ் பாரதி பார்க் விசினிட்டி 9. பழைய கலங்கரை விளக்கம் 10.காந்தி சிலை ஆகியவை ஆகும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!