News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News July 8, 2025

கிராம நத்தம் பட்டா இனி எளிதாகப் பெறலாம்

image

கரூர்: கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<> https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டங்களில், இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வழியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை! SHAREit

News July 7, 2025

கரூர்: அரசு கல்லுாரியில் இளநிலை பாடங்களுக்கு நேரடி சேர்க்கை

image

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்காதவர்கள் மாணவர் சேவை மையத்தில் நேரில் வந்து சேர்க்கை பெறலாம். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.

News July 7, 2025

கரூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974694>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!