News August 15, 2024

இசைப்பள்ளியில் சேர ஆட்சியர் அழைப்பு

image

தூத்துக்குடியில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குரல் இசை, பரதநாட்டியம், வயலின், தேவாரம், தமிழ் நாதஸ்வரம் போன்ற பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 15, 2025

தூத்துக்குடியில் 57 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக காவல்நிலைய வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்ததுடன், சைபர் மோசடி வழக்குகளில் பணத்தை மீட்டதில் சிறந்து செயல்பட்ட 57 போலீசார் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்கள் இன்று (நவ.14) நற்பணி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

News November 14, 2025

VOC துறைமுகத்தில் அக்டோபர் மாத ஏற்றுமதியில் 8.52% வளர்ச்சி!

image

தூத்துக்குடி VOC துறைமுகம் 2025 அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. மொத்த 20,584 TEUs ஏற்றுமதி கன்டெய்னர்களில் 17,506 TEUs Direct Port Entry (DPE) முறையில் செயல்படுத்தப்பட்டதாக துறைமுகம் தெரிவித்துள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிடும்போது 8.52% வளர்ச்சியை காட்டுகிறது. கடல் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் பணிகளில் துறைமுகத்தின் செயல்திறன் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.

News November 14, 2025

கல்லால் தாக்கி கொலை 4 பேருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!