News April 2, 2025
இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News November 20, 2025
BREAKING:சேலத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்தநிலையில், விஜயின் அனைத்து பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது இந்தநிலையில் தற்போது அவர் சேலத்தில் இருந்து டிசம்பர் நான்காம் தேதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
News November 20, 2025
BREAKING:சேலம் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார்? எதற்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முன் தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
சேலம்: மூளை தின்னும் வைரஸ் ? அமைச்சர் சொன்ன தகவல்!

கேரளாவில் ‘மூளை தின்னும் அமீபா’ வைரஸ் அதிகரித்து வரும்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டு இருந்தது.இது குறித்து சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும்,அமீபா பரவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது என்றார்


