News August 3, 2024
ஆவின் முகவர்களாக விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு ஆவின் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பாலக முகவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.
Similar News
News November 28, 2025
கடலூர்: 125 நீச்சல் வீரர்கள், 26 பாம்பு பிடி வீரர்கள் தயார்

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட 81 மாநில பேரிடர் குழு காவலர்களும், 125 நீச்சல் வீரர்களும், 26 பாம்பு பிடிப்பவர்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். 54 இடங்களில் கால்நடைகள் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 53 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 28, 2025
கடலூர்: 239 இடங்கள் பாதிக்கப்படும் என கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக 239 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 22 இடங்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 39 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 20 இடங்கள் மிதமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 158 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 28, 2025
கடலூரில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து- ஆட்சியர்

கடலூர் முதுநகரில் உள்ள சரக்கு துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களை இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் வந்துசெல்லும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கூடங்கள், ஓய்வறைகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.


