News August 6, 2024
ஆவின் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்: அமைச்சர்

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான ஆவின் உற்பத்தி பொருட்களை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Similar News
News December 10, 2025
சென்னை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 10, 2025
சென்னை விமான நிலையத்தில் இன்று 14 விமானங்கள் ரத்து

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் 9வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இன்று மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பினாங்கு, பாங்காக், சிங்கப்பூர் செல்லும் 3 பன்னாட்டு விமானங்களும், டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.
News December 10, 2025
சென்னை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ஆசாமிகள்

சென்னை கொளத்தூரில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், ஆட்டோ, பைக்குகளை போதையில் வந்த மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.


