News April 17, 2025
ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர் மக்களே… ஞாயிறு ரயில் அட்டவணையே மாறுது!

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் நாளை மறுநாள் நவ 23 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
News November 21, 2025
அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.
News November 21, 2025
திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


