News September 15, 2024
ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 15, 2025
தென்காசி வருகை தரும் பாஜக தலைவர்

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பாஜக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கினார். இந்நிலையில் வரும் (நவ.20) தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் மாலை 4 மணி அளவில் உரையாற்றுகிறார். மேலும் நவம்பர் 21 காலை ஊத்துமலை பகுதிகளில் விவசாயிகள் பிடி தொழிலாளர்கள் நெசவாளர்கள் சந்தித்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்க உள்ளார்.
News November 15, 2025
தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

தென்காசி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT
News November 15, 2025
குற்றாலம் அருவியில் குறைந்தளவு தண்ணீர்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை தற்போது நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்னொரு பகுதியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிவருகிறது.


