News August 15, 2024
ஆலத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் எம்பி அருண் நேரு, எம் எல் ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
Similar News
News December 10, 2025
பெரம்பலூரில் இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெனித்குமார் (31). இவருக்கும் இவரது மனைவி பாலஅபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெனித்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
பெரம்பலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.
News December 10, 2025
பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் (0-18) வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாமினை நேற்று (டிச.09) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.


