News September 14, 2024
ஆலங்குளம் அருகே கோழி வியாபாரி பலி

தருமபுரி மாவட்டம் கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாது(55). இவர் நெல்லையில் தங்கி, கோழிகளை மொத்தமாக எடுத்து சந்தைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று(செப்.,14) காலை ஆலங்குளம் மாறாந்தை பகுதியில் பைக்கில் கோழிகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
தென்காசி: 12th முடித்தால் கிராமப்புற வங்கி வேலை உறுதி!

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News October 31, 2025
தென்காசி: பள்ளி மாணவி தற்கொலை

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பவி இன்ஷா (14). இவர் நேற்று காலை, தனக்கு காது வலிப்பதாக தாயிடம் கூறினாராம். அதற்கு தாய் மருந்து போட்டு பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News October 31, 2025
குற்றாலத்தில் கடைகள் ஏலம் அறிவிப்பு

குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரருவிப் பகுதியில் சந்தனம் குங்குமம் தற்காலிக கடை அமைத்திட நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 முடிய உள்ள கால அளவிற்கு அனுபவித்து கொள்ளும் பொருட்டு நிபந்தனைகளுக்குட்பட்டு குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 07-ம் தேதி (07.11.2025) வெள்ளிக்கிழமை ஏலம் நடத்தப்படும்.


