News January 5, 2025
ஆலங்குளத்தில் மீன் பாசி மகசூல் ஏல குத்தகை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளங்களில் இந்த வருடத்துக்கான மீன் பாசி மகசூல் குத்தகை ஏலம் ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கல்யாண ராமசுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கலந்து கொள்பவர்கள் ஜி.எஸ்.டி. சான்றிதழ் மற்றும் ரூ.1000 வைப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம்.
Similar News
News April 27, 2025
இரயில்வேயில் உடனடி வேலைவாய்ப்பு

தென்காசி மக்களே திருநெல்வேலி, தூத்துக்குடி , மதுரை , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட இரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 27, 2025
மனைவியின் கள்ளக்காதலரை கண்டித்த கணவர் கொலை

சுரண்டை பகுதியை சேர்ந்தவர் தாமஸ் 26. கட்டட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. 2 வயதில் மகன் உள்ளார். முக்கூடல் சிங்கம் பாறையைச் சேர்ந்த அந்தோணி ஜெனித் 36, என்பவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி தாமஸ் வீட்டுக்கு சென்றபோது, நந்தினியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை தாமஸ் கண்டித்தார். இந்நிலையில் நேற்று காலை தாமஸ் வீட்டிற்கு வந்து தகராறு செய்த அந்தோணி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்.
News April 27, 2025
தென்காசி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்.26 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட எண்ணில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.