News November 25, 2024
ஆலங்குடி பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி மற்றும் வடகாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (நவ 26) நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, குப்பக்குடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, மாங்கோட்டை, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
புதுகை: குரூப்-2 போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு!

புதுகை மாவட்டத்தில் குரூப்-2, 2ஏ போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு (நவ.18) நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுக்கு 645 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குரூப் 2, 2a தேர்வின் முதல் நிலை தேர்வு கூட நுழைவுச்சீட்டு உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நேரில் தொடர்பு கொள்ளும் மாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

புதுகை, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு புதுகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கர லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு, மானிய உரங்களை பிற உரங்களும் இணைத்து விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<


