News March 12, 2025
ஆற்றுக்கால் பொங்கல் விழா – சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நாளை(மார்ச் 13) தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலக செய்திக் குறிப்பில் இன்று கூறப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Similar News
News March 13, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 13) காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு திருக்கோவில் பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதிய நிர்ணயம் செய்து வழங்க நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் திருக்கோவில் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடக்கிறது.
News March 13, 2025
காட்டு மாடு தாக்கி குமரியை சேர்ந்த வன ஊழியர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு ஊராட்சி, கூவக்காட்டுமலை பகுதியை சேர்ந்த அசோக்குமார் கோவை மாவட்டத்தில் வனத்துறை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டுமாடு தாக்கி உயிரிழந்தார். அசோக்குமார் உடல் வனத்துறையினர் மரியாதை செலுத்திய பின்னர் நேற்று(மார்ச் 12) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
News March 12, 2025
81 நாட்களுக்கு தண்ணீர் திறக்கு அரசு உத்தரவு

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக நீர்வளத்துறை மூலம் கோதை ஆறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (12.03.2025) முதல் 31.05.2025 வரையிலான இடைப்பட்ட 81 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி 21.27 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.