News August 16, 2024
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 6, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றின் ஊடுருவல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 160.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 6, 2025
திருவாரூர்: மழைக்கு இடிந்த வீடு-எம்எல்ஏ நேரில் ஆய்வு

முத்துப்பேட்டை, கோவிலூரைச் சேர்ந்தவர் பூமா(35). இவரின் வீடு கனமழை காரணமாக மழைநீர் ஊறி இருந்த நிலையில், வீட்டின் சுவர்கள் திடீரென்று இடிந்து விழுந்தன. இந்த நிலையில் இடிந்து விழுந்த வீட்டை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு வீட்டை இழந்த பூமாவுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது சிபிஐ ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, ரவி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


