News March 5, 2025

ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது – இருவர் தப்பியோட்டம்

image

தஞ்சை, கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை பெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 பேரை கள்ளபெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது.

Similar News

News July 6, 2025

தஞ்சை இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவர்களை மேற்கண்ட தொலைப்பேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

தஞ்சை: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News July 5, 2025

தஞ்சை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

தஞ்சை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட தொழில் மையத்தை (04362-230857) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க

error: Content is protected !!