News March 5, 2025
ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது – இருவர் தப்பியோட்டம்

தஞ்சை, கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை பெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 பேரை கள்ளபெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது.
Similar News
News November 19, 2025
தஞ்சை அருகே கல்லூரி மாணவர் பரிதாப பலி!

தஞ்சையை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (20). திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு டீக்கடைக்கு சென்றார். ஆர்.எம்.எஸ். காலனி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றது
News November 19, 2025
தஞ்சை: இரவு ரோந்து காவலர்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், (நவ. 18) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 18, 2025
தஞ்சாவூர்: நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை.சந்திரசேகரன் MLA தஞ்சை எம்பி முரசொலி ஆகியோர் கலந்து கொண்டனர்.


