News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி பதவிக்கு தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், பதவிக்கு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்தது.
News December 1, 2025
புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். <
News December 1, 2025
புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியோர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஆணையினை வழங்கினர்


