News March 25, 2025

ஆரம்ப சுகாதார பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்டம் செஞ்சை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கணேசபுரம் நகர் நலவாழ்வு மையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்,சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடம் ஒன்று நிரப்பப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ளவர்கள் https:// sivaganga.nic.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்ரல்.1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

சிவகங்கைக்கு வருகை தரும் துணை முதல்வர்!

image

சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் திருவுறுவச் சிலை திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நவ. 14, 15 ஆகிய நாட்களில் திமுக கழக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமாகிய உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கையில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

காரைக்குடி: இளம் பெண் கொலை – ஒருவர் கைது

image

காரைக்குடி அருகே ஆவடைபொய்கை என்ற இடத்தில் நேற்று மகேஸ்வரி என்ற பெண் அவரது காரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் சசிகுமார் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாத போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!