News March 30, 2024
ஆரணி: வேட்பாளருக்கு அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு

செஞ்சி, மேல்மலையனூர் ஒன்றியம், கப்ளாம்பாடி மற்றும் தாழங்குணம் ஆகிய ஊராட்சிகளில் இந்திய கூட்டணி சார்பில் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் M.S.தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்திற்கு இன்று வாக்குகள் சேகரித்தார்.
இதில் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் கழக மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
Similar News
News April 19, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
தீராத கடனும் காணாமல் போகும்

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.