News March 20, 2024
ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஆரணி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் கீழ் அடங்கும். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் ரெட் அலர்ட் நிவாரண பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரெட் அலர்ட் முன்னிட்டு தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நாளை நடைபெறக் கூடாது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
விழுப்புரத்தில் பருவ மழை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ.இராமான், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.
News November 28, 2025
விழுப்புரம்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!


