News April 29, 2025
ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
Similar News
News October 26, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (அக்:25) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News October 25, 2025
தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


