News August 26, 2024
ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

ஆரணியில் அரிமா சங்கம் சாா்பில் 1000 மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் இந்த பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் ஆரணி, திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் பதிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில் பஞ்ச பூதங்கள், தண்ணீா் தூய்மை செய்தல், பஞ்சாக்ர நிருத்தியாஞ்சலி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Similar News
News November 25, 2025
தி.மலை: டிராக்டர் மோதி வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி

சேத்துப்பட்டு அடுத்தகூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வீடுகளுக்கு டிஷ் பொருத்தும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து வீடு திருமும்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பல கனவுகளோடு வாழ்ந்தவரின் உயிர் நொடி பொழுதில் பிரிந்தது.
News November 25, 2025
தி.மலையில் கிடுகிடு உயர்வு…!

தி.மலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில்காய்கறிகள் விலை உயர்வு மற்றும் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News November 25, 2025
திருவண்ணாமலை: பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து காலை முதல் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


