News August 26, 2024
ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

இன்று ஆரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 1 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியபடி உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பரதநாட்டிய ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
Similar News
News November 16, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 16, 2025
தி.மலை: கடன் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

செய்யாறு இளநீர் குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்னன் (26) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பிரசாத் இவரை கடத்தி சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த கோகுலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
தி.மலை: நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் ரூ.13,000. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் 24.11.2025 க்குள் தேவையான ஆவணங்களுடன் சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


