News April 22, 2025
ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு பிரிவு

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


