News January 2, 2025
ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 18, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே; தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 18, 2025
தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஆய்வு

மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில், தீ விபத்து நடந்த கட்டிடத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தார் கலெக்டர் பிரவீன் குமார் உடன் இருந்தார்.
News December 18, 2025
திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சை: புதிய புகார் மனு

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில், சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் இன்னும் 2 நாளில் மலை மீது உள்ள தர்கா சார்பாக சந்தனக்கூடு நடைபெற உள்ளது. தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மலை மீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என புகார் அளிக்கப்பட்டது.


