News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
Similar News
News October 20, 2025
திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (20.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்காக மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரகாலங்களில் அருகிலுள்ள காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News October 20, 2025
ஆரணி: பச்சிளம் குழந்தை மீட்பு

திருவள்ளூர், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
திருவள்ளூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!