News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
Similar News
News November 12, 2025
சென்னையில் 184 படுகொலைகள்..!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கடந்த 22 மாதங்களில் சென்னையில் மட்டும் 184 படுகொலைகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு 102 கொலைகளும், இவ்வாண்டு 10 மாதங்களில் 82 படுகொலைகளும் நடந்துள்ளன. இதே காலகட்டத்தில் 419 செயின் பறிப்பு சம்பவங்கள், 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பல குற்றங்களை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.
News November 12, 2025
சென்னை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

சென்னை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 12, 2025
சென்னை: சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள ஆபத்து!

சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை நச்சுப் பொருள்களையும் நுண்ணுயிரிகளையும் சுமந்து நுரையீரலுக்குள் சென்று சுவாசப் பிரச்சினைகள், அழற்சி மற்றும் நீண்டகால நோய்களை ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க.


