News August 26, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News November 28, 2025
புறநகர் ரயிலில் சாகசம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News November 27, 2025
முதல்வர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என கூறியுள்ளார்.
News November 27, 2025
ECR-OMR இரும்பு மேம்பாலத்திற்கு அனுமதி

ECR மற்றும் OMR-ஐ இணைக்கும் வகையில் ரூ.204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பாலம் நீலாங்கரையில் அமைக்கப்படும் என்றும், இது பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி சாலையை நீட்டிப்பதன் மூலம் OMR-லிருந்து ECR-க்கு நேரடி இணைப்பை வழங்கும். இந்த பாலம், பயண நேரத்தை குறைத்து, விமான நிலையத்துக்கும் நேரடி இணைப்பை தருகிறது.


