News August 7, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது

image

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 6, 2025

சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா?

image

உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன். Turritopsis dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து, மீண்டும் தனது ஆரம்ப நிலையான ‘பாலிப்’ (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது. மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது. வேட்டையாடுதல் இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

News December 6, 2025

உக்ரைன் போருக்கு மன்னிப்பு கேட்ட புடினின் சீக்ரெட் மகள்

image

உக்ரைன் போரை நிறுத்தச்சொல்லி தந்தையிடம் சிபாரிசு செய்யும்படி புடினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் லூயிசா ரோசோவாவிடம் செய்தியாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லூசியா, உக்ரைனில் நடக்கும் போருக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், போருக்கு தான் காரணமில்லை எனவும் போரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

News December 6, 2025

எந்த அயோத்தியாக TN மாற வேண்டும்?: கனிமொழி

image

அயோத்தி போல <<18486296>> தமிழ்நாடு வருவதில் தவறில்லை <<>>என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல TN மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் RSS – பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா என கேள்வி எழுப்பியுள்ளார். கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!