News August 4, 2024

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

image

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது என இதுப்போன்ற செயல்கள் இருந்தால் 181 என்ற இலவச எண்ணை அழைக்கவும். மேலும் பிரச்சனைகள்/ஆலோசனைகளுக்கு Child Helpline 1098 என்ற இலவச எண்ணை அழைக்கவும் என்றார்

News November 14, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II) கணினிவழித் தேர்வு (CBT Type) (நவ-16) அன்று காலை 9.30 மணி முதல் 12.30மணி வரை முற்பகல் தேர்வும், மதியம் 02.30மணி முதல் 05.30மணி வரை பிற்பகல் தேர்வும் நடைபெறும். மேலும் காலையில் 8.30 மணிக்குள், மதியம் 1.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!