News August 10, 2024
ஆம்ஸ்ட்ராங்க கொலை தொடர்பாக போராடிய 1500 பேர் மீது வழக்கு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கருத்துகளை இயங்குநர் ரஞ்சித் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விசிக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது, எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
News November 20, 2025
சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி

கொடுங்கையூரை சேர்ந்தவர், 12 வயது சிறுமி. இவர், நேற்று தன் வீட்டருகே உள்ள மாளிகை கடைக்கு சென்று வந்த நிலையில், அவ்வழியே குடிபோதையில் வந்த மர்ம நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, கொடுங்கையூர், சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News November 20, 2025
சென்னை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சென்னை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


