News March 29, 2024
ஆம்பூர் வந்த வில்லன் நடிகர்

ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை முன்பு இன்று மாலை 6 மணியளவில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அவருடன் சென்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
Similar News
News November 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
திருப்பத்தூரில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக குறை தீர்வு கூட்டரங்கில் 12.11.2025 அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னாள் படைவீரர்கள் தேவைகள் கவனிக்கப்பட்டது.
News November 12, 2025
திருப்பத்தூர்: எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூர், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (நவ.12) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


