News November 23, 2024
ஆம்பூர் அருகே ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (19) என்பவருக்கு நேற்று (22.11.2024) திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் தனலட்சுமி அழைத்துக்கொண்டு வரும் வழியில் மலைப்பகுதியிலேயே ஆம்புலன்சில் தனலட்சுமிக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
Similar News
News December 5, 2025
திருப்பத்தூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

திருப்பத்தூர் மக்களே நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்; மிஸ் பண்ணாதீங்க!

திருப்பத்தூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் டிசம்பர் 06 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திருப்பத்தூர் ஒன்றியத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறும். 40 வயதுக்கு மேற்பட்டோர், பெண்கள், தொழிலாளர் சமூகத்தினர் உள்ளிட்டோருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு… உஷார்!

வேலூர் அடுத்த காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஸ்தான் (வயது 45) என்பவர் நேற்று (டிச.4) அவரின் செல்போனை திருடியதை பார்த்து கையும் களவுமாக பிடித்து ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


