News April 25, 2025
ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் கோட்டை ஈஸ்வரன் கோயில்

திருப்பத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 25, 2025
ரோந்து பணியில் உள்ள காவலர் அதிகாரிகளின் விவரங்கள்

இன்று (ஏப்ரல்.25) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் காவல் நிலைய ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இரவில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக இந்த எண்ணிற்கு அழைக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News April 25, 2025
திருப்பத்தூரில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று புதியதாக சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில் பூங்கா அமைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.