News November 23, 2024
ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது

சிவகாசியிலிருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம்(நவ.21) இரவு ஆம்னி பேருந்து ஒன்று 6 பயணிகளுடன் சென்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியதில் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.
Similar News
News December 19, 2025
BREAKING விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 அன்று தொடங்கி டிச.14 வரை நடைபெற்றது. இதனையடுத்து சற்றுமுன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,26,485 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆக 14,36,521 ஆக உள்ளது. இதில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
ஶ்ரீவி.,: பணம் மோசடி புகார்: கே.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜன.5.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
விருதுநகர்: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <


