News August 9, 2024

ஆமை வேகத்தில் புதிய பேருந்து நிலையம்

image

உடுமலையில் கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களுக்கு முன் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் பல வருடங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டை கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News December 2, 2025

திருப்பூர்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

image

கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் பெருமாநல்லூர் அருகே தட்டாங்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். ஹோட்டல் வேலை செய்யும் சக்திவேல், மனைவி லட்சுமி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நேற்று கத்தியால் குத்தினார். பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

சிவ பக்தர்களுக்கு நற்செய்தி

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 5 பேருந்துகளும் புதன்கிழமை 25 வியாழக்கிழமை 25 வெள்ளிக்கிழமை 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

News December 1, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .

error: Content is protected !!