News April 16, 2025
ஆன்லைன் முதலீடு – ரூபாய் 11 லட்சம் மோசடி

வில்லியனூரை சேர்ந்த இஸ்மத் நாச்சியார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இஸ்மத் ட பல்வேறு தவணைகளாக ரூ.11,42,736 முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணிகளை செய்து முடித்து ஏமாந்தார் அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்
Similar News
News September 18, 2025
புதுச்சேரி- மரப்பாலம் மின்பாதையில் மின்தடை அறிவிப்பு

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வில்லியனுார் – மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 18, 2025
இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

பதினைந்தாவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
News September 18, 2025
புதுச்சேரி: ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை சார்பாக சேவா பகவாடா மாணவர்களுக்கான ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏம்பலம் அரசு மறைமலை அடிகள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை மற்றும் வேளாண் துறை செயலர் யாசின் சவுத்ரி கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ரேபிஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெட்டை துறை செயலர் வெளியிட்டார்.