News March 28, 2024
ஆன்லைனில் பண மோசடி: 7 பேர் கைது

டைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பரிசு கூப்பன்களை காட்டி கூப்பன்களில் பரிசு விழுந்தால் வருடத்திற்கு 7 நாட்கள் வீதம் 10 வருடத்திற்கு 70 நாட்கள் உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் தங்கலாம் என கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தினமும் விழிப்புணர்வு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இன்று அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் “மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம். விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் இதனைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
News October 22, 2025
திண்டுக்கல்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
News October 22, 2025
திண்டுக்கல் இளைஞர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேருவதற்கு ’www.tahdco.com’ என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.