News June 26, 2024
ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
Similar News
News November 23, 2025
தி.மலை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
தி.மலையில் வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும். ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 23, 2025
களைகட்டும் திருவண்ணாமலை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று இரவு பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


