News September 13, 2024
ஆத்தூர் போலீஸ் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
தனியார் பேருந்து மோதி வடமாநில தொழிலாளி பலி

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிரமன் அலி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்த நிலையில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி – அரசு மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பது மூலம் செயல் திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
News December 5, 2025
தூத்துக்குடி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


